S.சண்முகையா பாண்டியன்

.

சாகா வரம் பெற்ற சண்முகையா பாண்டியன்

சண்முகையா பாண்டியன் பிறப்பு
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் தாலுகா,
ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில்,, உடையார்குளம்
ஊராட்சியில் அமைந்துள்ள மறவன் குறிப்பன்குளம்
என்ற ஊரில் சண்முகத்தேவர்- ஆறுமுகம்மாள்
தம்பதியினருக்கு தெய்வீகத் திருமகனார் பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர் மறைந்த இரண்டு நாள்
கழித்து 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம், 2ம் தேதி,
ஐப்பசி-17, சனிக்கிழமை அன்று சண்முகவேலு
என்ற சண்முகையாப் பாண்டியன்  மகனாக
பிறந்தார். அவருடன் உடன் பிறந்தவர்கள் ஆறு ஆண்கள்
மற்றும் ஒரு பெண் ஆவர். சண்முகையாப் பாண்டியன்
இளைமையிலேயே மிகுந்த துடிப்பும், வீரமும் ஒருங்கே
பெற்றவராக திகழ்ந்துள்ளார். 

மறவர் சாதியைச் சேர்ந்த வீடுகள் பதினைந்தே
இருந்தாலும், சண்முகையா பாண்டியன் சிறுவயது
முதலே அநீதிகளைக் கண்டு பொறுக்க முடியாதவராக
இருந்துள்ளார். விளைவு எங்கெல்லாம் அநியாயங்களும்,
அக்கிரமங்களும் நடக்கிறதோ அங்கெல்லாம்
சண்முகையா பாண்டியன் அவற்றை எதிர்த்து முதல்
ஆளாக நின்றுள்ளார். பயம் என்பதே தனது பால்ய
வயதில் இருந்தே அறியாத பாலகனாக வளர்ந்து
வந்துள்ளார். சண்முகையா பாண்டியன், தனது பள்ளிப்
படிப்பை நாசரேத்தில் உள்ள எஸ்.டிஏ பள்ளியில்.
படித்தார். எதையும் எதிற்கும் அவருடைய குணம்
அவருக்கு அந்த வயதிலேயே பல பிரச்சினைகளை
உருவாக்கியது. அதனால் அவரால் பத்தாம் வகுப்பிற்கு
மேல் மேற்கொண்டு பள்ளிப்படிப்பை தொடர
இயலவில்லை.

Scroll to Top