இளமைப் பருவம்
சண்முகையாப் பாண்டியன் இளமையில் இருந்தே
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மீது மிகுந்த
பற்றும் பக்தியும் கொண்டிருந்தார். தேவர் அவர்களை
தன் ஒரே இறைவனாக அவர் கொண்டிருந்தார் என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு தேவர் மீது உயிராக
இருந்தார். மேலும், தேவரின இளைஞனுக்கே இருக்கும்
மிடுக்கும், துடிப்பும், சண்முகையா பாண்டியனையும்
விடவில்லை. அவர் வளர வளர, அவரைச் சுற்றி
பிரச்சினைகளும் வளர்ந்து கொண்டே வந்தது. இதனால் அவருடைய பெற்றோர்கள் அவரை அதே மாவட்டத்தில்
29 மைல் தூரத்தில் உள்ள அவரின் தாயார் ஊரான
மணியாச்சியில் கொண்டு விட்டுள்ளனர்.
ஊரை மாற்றிவிட்டால், ஊமையாகிவிடுவானா
சண்முகையாப் பாண்டியன்? உதிரத்திலே
கலந்துள்ள அதே வீரம், அங்கும் எதிரொலிக்க, அநீதி
இழைப்பவர்கள் அவரைக் கண்டு நடுங்கியுள்ளனர்.
குறிப்பாக இளைஞன் சண்முகையா பாண்டியனின்
கம்பீரமும், கணீர் குரலும் காண்போரை வியக்க
வைத்துள்ளது. சாதீய நெருப்பில் தகித்துக் கொண்டிருந்த
தூத்துக்குடி மாவட்டத்தில், சண்முகையா பாண்டியன்
தனது இளம் வயதிலேயே தேவரின மக்களை
ஒருங்கிணைக்கும் பணியில் ஆர்வமாக இருந்துள்ளார்.
சிறிதுகாலம் பக்கத்தில் உள்ள கோவில்பட்டியில்
உணவகக் கடை ஒன்றை நடத்தியுள்ளார்.
சமூகப் பயணம்
90 களின் காலகட்டம் அது. தென்தமிழகத்தில் சாதீய
பதட்டம் மிகுந்திருந்த நேரம். தேவரினத்திற்கென
தலைவன் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த
சமயம் அது. சண்முகையா பாண்டியனால் இருப்பு
கொள்ள முடியவில்லை. துடிக்கிறார்! துயரப்படுகிறார்!
இவரின் இந்நிலையக் கண்ட அவரது குடும்பத்தார்.
சண்முகையாப் பாண்டியனை தடுக்கின்றனர். சாதிக்காக
உன் வாழ்வை கெடுத்துக் கொள்ளாதே என கண்டித்து
அவரின் முயற்சிகளுக்கு அணை போடுகிறார்கள்.
அணை போட அவர் என்ன அம்பாசமுத்திர மழை
நீரா? அவர் சதுரகிரி மலையில் உருவாகிய காட்டாற்று
வெள்ளம். காண்போரை எல்லாம் கபளீகரம் செய்யும்
அந்த காட்டாற்று வெள்ளத்தின் முன்னால் உறவுகளின்
அணை எம்மாத்திரம்?
தென்பகுதியில் தேவரினம் பாதிக்கப்படும் போது
அப்பிரச்சினைகளை உரக்கச் சொல்லி உரைப்போர்
எவரும் இல்லை என, தனது உறவினர்களை எல்லாம்
உதறித் தள்ளிவிட்டு, தான் நடத்திய உணவகக்
கடையையும் மூடிவிட்டு, உறவுகளை விட உணவை விட இன உணர்வே முக்கியம் என சமூக அரசியலில்
இறங்குகிறார். ஒரு இனத்திற்கு அதன் அடையாளம்தான்
அடிநாதம் என்ற கோடப்பாட்டை உள்வாங்கிக் கொண்ட
அவர், அன்றைய தேதியில் பாண்டிய வம்சத்தைச்
சேர்ந்த தேவரினம், தனது ‘பாண்டியன்’ என்ற பட்டப்
பெயரை பயன்படுத்த மறந்து கொண்டிருந்தபோது,
தேவரினத்திற்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில்
தன்னுடைய இயற்பெயரான சண்முகவேலு என்ற
பெயரை “சண்முகையா பாண்டியன்” என்று மாற்றி
அதை முறையாக அரசு கெஜட்டில் வெளியிடுகிறார்.
தேவர்குல கூட்டமைப்பு நேதாஜி தேசிய பார்வேர்ட் பிளாக்
சீனிச்சாமித் தேவர்
தமிழ்நாடு தேவர் பேரவையில் பாண்டியன்
திரு. சீனிச்சாமித்தேவர் தலைமையில் அனறைய
காலகட்டத்தில் தேவரின அரசியலில் மும்முரமாக
இருந்த தமிழ்நாடு தேவர் பேரவையில் தன்னை
இணைத்துக் கொண்டு தேவரினத்திற்கான தனது
சமூக அரசியலைத் தொடங்குகிறார். சண்முகையாப்
பாண்டியனின் வேகத்தையும் ஆற்றலையும் கண்ட
இயக்க நிர்வாகிகள், அவரை தமிழ்நாடு தேவர்
பேரவையின் மாநில இளைஞரணிச் செயலாளராக
நியமனம் செய்கின்றனர். நெல்லை மறவர்களுக்கே
உரிய அகன்ற முகம், நீண்ட முடி, உருட்டும் விழிகள்,
முருக்கிய மீசை, ஆஜானுபாகுவான தோற்றம் என
சண்முகையாப் பாண்டியன், தேவரின
குறிப்பாக இளைஞர்களிடையே துருவ நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பிக்கிறார். அவருடைய வேகமும்,
வீரமும், சொற்பொழிவாற்றும் திறமையும் பல லட்ச
இளைஞர்களை தன்பால் ஈர்த்து சமூகத்திற்கான
விடிவெள்ளியாக உருவெடுக்கிறார். நெல்லையில்
துவங்கிய புயல், சுழன்று சுழன்று ஆப்பநாட்டிற்குள்
நுழைகிறது. புயலானது தற்போது சூறாவளியாக
உருமாற்றம் அடைந்து ஆப்பநாட்டை மையம்
கொள்கிறது. சண்முகையாப் பாண்டியன் எங்கு
சென்றாலும் மக்கள் வெள்ளம் அலைகடலென
திரள்கிறது. அவரின் உரை எனில் அன்றைய
பொழுது அனைவருக்கும் அற்புதம் நிகழ இருக்கும்
நாளாகிப்போனது, சண்முகையாப் பாண்டியனின்
பொதுக்கூட்டம் நடக்கிறது எனில் கூட்டம்
நடைபெறும் அந்த ஊரே திருவிழாக் கோலத்தில்
காணப்படும். தேவரின மக்களின் மத்தியில்
புதைந்து போய்க்கொண்டிருந்த புரட்சிக்கு புத்துயிர்
கொடுத்தார். சண்முகையாப் பாண்டியனின் புகழ் பட்டி
தொட்டியெல்லாம் பரவியது.